எம்.எஸ்.விக்கு திரையுலகினரின் அஞ்சலி
பதிவு செய்த நாள் | செவ்வாய் 14, ஜூலை 2015 |
---|---|
நேரம் | 8:03:08 PM (IST) |
தமிழ் திரையுலகின் மெல்லிசை மன்னர் என்று அழைக்கப்படும் பழம்பெரும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலர் நேரிலும், சமூக வலைத்தளங்களிலும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். எம்.எஸ். விஸ்வநாதன் உடலுக்கு ரஜினிகாந்த், டி.ஆர்.ராஜேந்திரன், சரண், சுசீலா, மு.க.ஸ்டாலின், உள்ளிட்ட திரையுலகப் பிரமுகர்களும், அரசியல் பிரபலங்களும், பொதுமக்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.