மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுடன் பிறந்த நாளை கொண்டாடிய‌ சினேகா

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுடன் பிறந்த நாளை கொண்டாடிய‌ சினேகா
பதிவு செய்த நாள் சனி 16, அக்டோபர் 2010
நேரம் 5:27:45 PM (IST)

பாலவிகார் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் இல்லத்துக்குத் தேவையான உணவுப் பொருள்கள், மளிகைப் பொருள்களை முழுவதுமாக தன் செலவில் வாங்கித்தந்தார். பாலவிஹாரின் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சினேகா, இனிப்புகள், எழுதுபொருள்கள் என அவர்கள் கேட்ட அத்தனை உதவிகளையும் செய்து கொடுத்தார்.பிற்பகல் வரை அங்கேயே இருந்த சினேகா, பாலவிகார் குழந்தைகளுடன் சந்தோஷமாக ஆடிப் பாடினார். அவர்கள் மத்தியில் கேக் வெட்டியபோது 100 குழந்தைகளும் சினேகாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறினர். பின்னர் குழந்தைகளுக்கு கேக் ஊட்டி விட்டார். சினேகாவே கைப்பட அவர்கள் அனைவருக்கும் உணவு பரிமாறினார்.Thoothukudi Business Directory