சிவன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்: ஆயிரகனக்கானோர் பங்கேற்பு!

சிவன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்: ஆயிரகனக்கானோர் பங்கேற்பு!
பதிவு செய்த நாள் செவ்வாய் 27, ஏப்ரல் 2010
நேரம் 12:59:00 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடந்தது. தேரோட்டத்தை காண ஆயிரக்கனக்கான பக்தர்கள் குவிந்ததால் நகரமே விழாக்கோலமாக காட்சியளித்தது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை கோலகலமாக நடந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு, இன்று காலை 7.30 மணியில் இருந்து 8.30 மணிக்குள் சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுடன் திருத்தேருக்கு எழுந்தருளல் மற்றும் திருத்தேர் பவனி சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. பின்னர் காலை 10.35 மணிக்கு பக்தர்களால் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. இதில்,துறைமுக சபை பொறுப்புக் கழக உறுப்பினர் என்.பெரியசாமி, ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ. சுடலையாண்டி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இதில் கலந்துகொண்டனர். தேரோட்ட விழாவை முன்னிட்டு யானை, குதிரை அணிவகுப்பும், ராஜமேளம், கோட்டயம் மகளிர் செண்டை மேளம், வாடிப்பட்டி மேளம், மதுரை கின்னி கட்டி மேளம், நையாண்டி மேளம், உறுமி மேளம், பொய்க்கால் ஆட்டம், களியல் ஆட்டம், பொம்மலாட்டம், பொய்கால் குதிரை ஆட்டம், மயில் ஆட்டம், மாடு ஆட்டம், சிவதொண்டர்களின் கைலாய சிவபூதகண வாத்தியம், சிலம்பாட்டம் உள்ளிட்டவைகளுடன் தேர் வீதிஉலா நடந்தது. இதில் ஆயிரக்கனக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ சிவ, ஓம் முருகா, ஓம்சக்தி பராசக்தி, ஒம்காளி ஜெய்காளி கோஷங்கள் எழுப்பியவாறு பக்தி பரவசத்துடன் வலம் வந்தனர். (புகைப்படம்:முருகன்,பிரபு)



Thoothukudi Business Directory