அழகர் பப்ளிக் பள்ளியில் அழகர் மேளா 2011

அழகர் பப்ளிக் பள்ளியில் அழகர் மேளா 2011
பதிவு செய்த நாள் செவ்வாய் 13, டிசம்பர் 2011
நேரம் 7:16:00 PM (IST)

தூத்துக்குடி முத்தம்மாள் காலனியில் உள்ள அழகர் பப்ளிக் பள்ளியில் அழகர் மேளா 2011 என்னும் கணிதம் மற்றும் அறிவியல் விழாவை இன்று காலை பள்ளியின் நிறுவனர் ஜெயராமன் துவக்கி வைத்தார். இன்றும், நாளையும் நடைபெறும் விழாவில் எல்கேஜி முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர். பண்டைய காலம் முதல் இன்றைய நவீன காலம் வரை அறிவியல் மற்றும் கணிதத் துறையில் உள்ள வளர்ச்சி குறித்து மாணவர்கள் தாங்கள் கற்றுக் கொண்ட விதம் குறித்து விழாவை காணவந்த பெற்றோர்களுக்கும், பொதுமக்களுக்கும் எடுத்து கூறிய விதம், மாணவர்களின் அறிவாற்றல் காண்போரை வியக்க வைத்தது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் ஆஷாகுகன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் செய்திருந்தனர். இதில், முதன்மை கல்வி அலுவலர் ருக்மணி சிறப்பு விருந்தினராக‌ கலந்துகொண்டார்.Thoothukudi Business Directory