ஸ்கார்டியோ ஸ்பிரின்ஸ் பிரமாண்ட கப்பல் உட்புறத் தோற்றம்

பதிவு செய்த நாள் | செவ்வாய் 14, ஜூன் 2011 |
---|---|
நேரம் | 11:24:55 AM (IST) |
ஸ்கார்டியோ ஸ்பிரின்ஸ் 9 அடுக்குகளை கொண்ட பிரமாண்ட கப்பல் ஆகும். 317 அறைகளை கொண்ட இந்த கப்பலில் 1044 பயணிகளும், 200 கப்பல் ஊழியர்களும் பயணம் செய்ய முடியும். இதில் ஒரே நேரத்தில் 250 பேர் அமர்ந்து உணவருந்த கூடிய ஹோட்டல், பார், நடன அரங்கம் போன்றவை உள்ளது. இதில் 300 டன் சரக்குகளை கொண்டு செல்ல முடியும். 111 எக்கனாமிக் அறைகள், 2 ஊனமுற்றோருக்கான அறைகள், 22 சூப்பர் டீலக்ஸ் அறை, 169 டீலக்ஸ் அறைகள், 11 முதல் வகுப்பு அறைகள் உள்ளது. டீலக்ஸ் அறைகளுக்குள் கழிப்பிட வசதியும், சூப்பர் டீலக்ஸ் அறையில் பாத்ரூம் வசதியுடன் கழிப்பிட வசதியும் கொண்டுள்ளது. 9 அடுக்குகளில் முதல் 3 அடுக்குகளில் சரக்குகளை வைக்க முடியும். 4லில் இருந்து 7 அடுக்குகளில் பயணிகள் அறைகள் உள்ளது. 8 வது அடுக்கில் கப்பல் ஊழியர்களும், 9 வது அடுக்கில் திறந்து வெளியாகவும் உள்ளது.