டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் காயமடைந்த வருண் சக்ரவர்த்திக்கு பதிலாக ரவி பிஷ்னோய் சேர்க்கப்பட்டார். முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணியில் கேப்டன் இப்ராஹிம் ஜத்ரன் (37), ரசூலி (26), ரஷித் கான் (28), முகமது நபி (20) ஆகியோர் ஓரளவுக்கு ரன் சேர்த்தனர்.

இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் அபாரமாக பந்துவீசிய நிதிஷ் குமார் 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் - அபிஷேக் சர்மா ஜோடி அதிரடி தொடக்கம் அமைத்துக் கொடுத்தது.

இருவரும் சிக்சர்களைப் பறக்கவிட, முதல் விக்கெட்டுக்கு 6.2 ஓவர்களில் 88 ரன்கள் சேர்ந்தது. அபிஷேக் சர்மா 19 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியைத் தொடர்ந்த சஞ்சு சாம்சன் 22 பந்துகளில் 57 ரன்கள் விளாசி அரைசதம் அடித்து வெளியேறினார். ஷ்ரேயஸ் ஐயர் 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் இணைந்து பொறுப்பாக ஆடிய இஷான் கிஷன் (38*) மற்றும் திலக் வர்மா (15*) ஆகியோரின் ஆட்டத்தால், இந்திய அணி 14.5 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.