உக்ரைனின் பல்வேறு நகரங்களைக் இலக்கு வைத்து ரஷ்யா ட்ரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தீவிரத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. சமீப நாட்களாக உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இத்தாக்குதல்களில் பொதுமக்களின் குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் உட்கட்டமைப்புகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.
இது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், "நேற்று முன்தினம் மாலை முதல் ஒடெசா (Odesa) நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர வான்வழி குண்டுவீச்சு மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மின்சாரம் இன்றித் தவித்து வருகின்றன" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "ரஷ்யாவின் இத்தாக்குதல்களில் 12 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் இந்திய நாட்டவர் ஆவார். தங்கள் குடும்பத்தினரையும் அன்பிற்குரியவர்களையும் இழந்து தவிக்கும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

