தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தலைத் தடுத்து, 24 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்யும் பணியில் சிறப்பாகச் செயல்பட்ட உதவி ஆய்வாளர் ஐ. முத்துராஜா, தலைமைக் காவலர்கள் மு. கார்த்திக், தா. ஜான் அந்தோணி ராஜ், முதல் நிலைக் காவலர்கள் ஜே. ஜோசப், மு. சிவகுமார் காவலர் ப. தினேஷ்குமார் ஆகியோரைத் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர் இரா. திருநாவுக்கரசு, திருநெல்வேலியில் உள்ள சரக அலுவலகத்திற்கு நேரில் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.