கன்னியாகுமரி மாவட்டம், திங்கள்சந்தை அருகே மேக்காமண்டபம் அடுத்த கடமலைக்குன்று பகுதியை சேர்ந்தவர் சுந்தரதாஸ். இவரது மனைவி தங்கலீலா (67). இந்த தம்பதிக்கு சிபி என்ற மகனும், ஜாஸ்மின் ஷீபா என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. சுந்தரதாஸ் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இதனால் தங்கலீலாதிங்கள்நகர் நடுதேரியில் வசிக்கும் மகள் ஜாஸ்மின் ஷீபா (39) வீட்டில் தங்கினார். மகன் சிபி (37) என்பவருக்கு அதிகளவில் மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் ஜாஸ் மின் ஷீபா வீட்டில் இருந்த தங்கலீலா மர்மமான முறை lயில் இறந்து கிடந்தார். அங்கிருந்த தலையணையில் ரத்தக்கறை இருந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற இரணியல் போலீசார் தங்கலீலா உடலை கைப்பற்றி, அவரது மகளிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில், தங்கலீலாவை அவரது மகன் சிபி கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது தாயை கொன்றதை சிபி ஒப்புக்கொண்டார். இதனை தொடர்ந்து நேற்று சிபியை போலீசார் கைது செய்தனர்.

சிபி அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறி இருப்பதாவது: எனக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. நான் அவ்வப்போது எனது தாயாரிடம் மது குடிக்க பணம் கேட்பேன். ஆனால் அவர் பணம்தர மாட்டார்.எனது சகோதரி பணம் கேட்டால் மட்டுமே கொடுப்பார்.

சம்பவத்தன்று நான் மதுபோதையில் இருந்தேன். சகோதரி வீட்டுக்கு சென்று சாப்பிட்டு விட்டு அம்மாவிடம் பணம் கேட்க வேண்டும் என நினைத்தேன். இரவு அங்கு சென்று தாயாரிடம் பணம் கேட்டேன். நான் மது குடிப்பதற்காக பணம் கேட்டதால் எனது அம்மா பணம் தரவில்லை. இதனால் எனக்கும் எனது அம்மாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஏற் பட்டஆத்திரத்தில் அவரை கட்டிலில் தள்ளி கழுத்தை நெரித்தேன்.

பின்னர் அருகில் கிடந்த தலையணையை எடுத்து அவரது முகத்தில் வைத்து அமுத்தினேன். சிறிது நேரத்தில் அவரிடம் இருந்து எந்த எதிர்ப்பும் வரவில்லை. பின்னர் அங்கிருந்து சென்று விட்டேன். மது போதையில் இதை செய்து விட்டதாக கூறி அழுதுள்ளார்.

சிபிக்கு உடல் நல குறைவு ஏற்பட்டிருந்தது. இதனால், சிபியை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போலீசார், பின்னர் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்