கோவில்பட்டி அருகே பருத்தி எடுத்துக் கொண்டிருந்த பெண் பாம்பு கடித்து பரிதாபமாக உயிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கொப்பம்பட்டி அருகில் உள்ள சிவந்திபட்டி கிராமம் தெற்கு தெருவில் வசிப்பவர் பாலமுருகன். இவரது மனைவி கார்த்திகா தேவி (37). இவர் நேற்று தனது கணவர் மற்றும் மாமனார் உடன் பருத்திக்காட்டில் பருத்தி எடுத்துக் கொண்டிருந்தபோது பாம்பு கடித்ததாம். உடனே அருகில் பருத்தி எடுத்துக் கொண்டிருந்த கணவரிடம் விபரத்தை கூறினார்.

உடனடியாக அவர் இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு துரைசாமிபுரம் விளக்கு அருகில் வந்த போது கார்த்திகா தேவி மயக்கம் அடைந்துள்ளார். பின்னர், உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கொப்பம்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.