இவ்விழாவிற்குச் சங்கத் தலைவர் ஞானசேகர் தலைமை தாங்கினார். சங்கச் செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாலசிங்கம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கரும்பன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, தொழிலாளர்களுக்குச் சீருடைகள் மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கிச் சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில் திருத்தப்பட்ட 4 தொழிலாளர்கள் சட்டங்களைத் தமிழ்நாடு அரசு அமல்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும். மூட்டை சுமை ஏற்று மற்றும் இறக்கும் தொழிலாளர்களுக்கு எனத் தனியாக நல வாரியம் அமைக்கப்பட வேண்டும். தொழிலாளர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும்; பணியின் போது மரணம் ஏற்பட்டால் அவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். தொழிலாளர்களை ஈ.எஸ்.ஐ. திட்டத்தில் இணைத்து உரிய மருத்துவ வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில் சங்கப் பொதுச்செயலாளர் கணபதி சுப்பிரமணியன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்டத் தலைவர் கிருஷ்ணராஜ், செயலாளர் லோகநாதன், மாநகரச் செயலாளர் தனலட்சுமி, நிர்வாகிகள் வழக்கறிஞர் முத்துலெட்சுமி, சுப்பிரமணியன், கிருஷ்ணமூர்த்தி, மாடசாமி, பொன்பாண்டி, தட்சணாமூர்த்தி, கருணாநிதி, கலாஸ்டின், ஜான் டேவிட், இசக்கிமுத்து, முருகன், முத்துராமன், பாலா, குமார் உள்ளிட்ட திரளான தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். நிறைவாக ஜீவா நன்றியுரையாற்றினார்.

