நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் உண்டாகியுள்ள பேரழிவைக் கண்டு மிகுந்த மனவேதனை அடைவதாக நடிகர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: "நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் உண்டாகியுள்ள பேரழிவைக் காண்பது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்கள், பாதிக்கப்பட்ட அனைவரும் மற்றும் இன்னும் மீட்கப்படக் காத்திருப்பவர்கள் ஆகியோருக்காக நான் பிரார்த்திக்கிறேன். அவர்களின் பாதுகாப்பு மற்றும் மனவலிமைக்காகவும் வேண்டிக்கொள்கிறேன்." இவ்வாறு அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

