தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் விமன். இவரது மனைவி சண்முகக்கனி (85). தனியாக வசித்து வந்த இவர், கடந்த 3 ஆண்டுகளாகத் தனது மகள் தமிழ்ச்செல்வியின் பராமரிப்பில் அவரது வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், தனது மகன் செலவுகளுக்குப் பணம் தரவில்லையாம்.
இதனால் மிகுந்த மனவேதனையிலும் விரக்தியிலும் இருந்த சண்முகக்கனி கடந்த 6-ம் தேதி வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்துக் குடித்து மயங்கி விழுந்தார். அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரை உடனடியாக மீட்டுச் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காகத் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

