கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 வாலிபர்கள் இன்று தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாரதிநகர் பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்த முனியசாமி மகன் ஞானதிரவியம் (30) என்பவரை முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார். மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளான பாரதி நகரைச் சேர்ந்தவர்களான செல்லபாண்டி மகன் மகாராஜன் (35) மற்றும் முத்து மகன் முத்துராஜ் (25) ஆகிய இருவரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின்படி சம்பந்தப்பட்ட போலீசார் கைது செய்து திருநெல்வேலி மத்திய சிறையில் அடைத்தனர்.

