போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் நோக்கில், போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு மனித சங்கிலி இயக்கம் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.

கோவில்பட்டி கோ. வெங்கடசாமி நாயுடு (தன்னாட்சி) கல்லூரி, டைனமிக் லயன்ஸ் கிளப் மற்றும் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு ஆகியவை இணைந்து இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தன. இதில் திரளான கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பேனர்களை ஏந்தி மனித சங்கிலியாக நின்றனர்.

கோவில்பட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் கொடியசைத்து மனித சங்கிலி இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் செயலாளர் மகேந்திரன், இயக்குனர் மகேஷ் குமார், முதல்வர் பாண்டி ராணி மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள் பங்கேற்றனர். லயன்ஸ் கிளப் சார்பில் மாவட்ட ஆளுநர் வெற்றி செல்வன், இரண்டாம் நிலை துணை ஆளுநர் பன்னீர் செல்வராஜ், கோவில்பட்டி தலைவர் ரூத் ரத்தினகுமாரி, செயலாளர் வள்ளியம்மை மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் தலைவர் தமிழரசன், நிர்வாகிகள் வழக்கறிஞர் ரவிக்குமார், ராஜசேகரன், துரைராஜ், ராஜாராம், பழனிச்சாமி, செண்பகராஜ், கமல் ரமேஷ், ராதாகிருஷ்ணன், வினோபா, மாரிமுத்து குமார், ஜெகன், பாலாஜி, எழுத்தாளர் சுரேஷ்குமார், பூலோகபாண்டியன், நாஞ்சில் குமார், தேவராஜன், ஜெயா ஜனார்த்தனன், மேரி ஷீலா, ராமலெட்சுமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைக் கல்லூரியின் தொழில் நெறி கணக்கியல் மற்றும் வணிகவியல் துறைத் தலைவர் மாரியப்பன், வழக்கறிஞர் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர் ஆகியோர் செய்திருந்தனர்.