கடந்த நவ.1ஆம் தேதி தமிழ்நாடு நாள் விழாவில் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த பன்னூல் ஆசிரியர் டி.எம்.பீர்முகம்மது அவர்களின் புத்தகங்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டு இதற்காக ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.10இலட்சம் வழங்கப்பட்டது,
இதையடுத்து 35க்கும் மேற்பட்ட தமிழ் இலக்கிய நாவல்கள் எழுதியுள்ளதோடு, இலங்கை மலையக மக்களின் உரிமைகளுக்காக தனது எழுத்துக்களின் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். இலங்கை தோட்டத் தொழிலாளர்களின் அவலங்களை கங்காணியின் மகள் என்ற நாடக நூலின் மூலம் வெளிப்படுத்தியவர்.
இந்நிலையில் பன்னூல் ஆசிரியர் டி.எம்.பீர்முஹம்மதுவின் 25ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி கல்லிடைக்குறிச்சி, சத்திரம் தெரு பள்ளிவாசலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ரயில் பயணிகள் நலச் சங்கத் தலைவர் உமர் பாரூக் தலைமை வகித்தார். இலங்கை மலையக இலக்கிய வெளியீட்டாளரும், இந்து கலாச்சார நிதி ஆணைய உறுப்பினருமான விக்ரமசிங்க நினைவுரை வழங்கினார்.
விழாவில் எழுத்தாளர் பெரியசாமி சிவஞானம் சார்பில் பன்னூல் ஆசிரியர் டி.எம்.பீர்முஹம்மது மகன் மீரான் முகைதீனிடம் பண முடிப்பு வழங்கப்பட்டது. விழாவில் சத்திரம்தெரு பள்ளிவாசல் ஜமாத் தலைவர் ஷாகுல் ஹமீது வரவேற்றார். துணைத் தலைவர் அப்துல் ரசாக் நன்றி கூறினார். பள்ளிவாசல் இமாம் இத்ரீஸ் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சியில் அரசியல் கட்சி நிர்வாகிகள் திமுக நெய்வேலி துரை, கேடிசி சரீப், மதிமுக அப்துல் சமது, எஸ்டிபிஐ மைதீன் பிள்ளை கல்லிடை ஜமாத் பொருளாளர் ஏ.எம். முகம்மது மீரான், ஜமாத் செயலாளர் முகைதீன் பிச்சை என்ற துரை, ஒலிமாலிக், அனிபா, பகதூர் ஷா, தக்கரை பீர்முகம்மது, மீரான் சாகிபு, அபுல் அசன் சாதலி, ரவூப், ரபீக், நவ்சாத், சாதிக், தானிஷ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

