மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் நடைபெற்ற 31-வது தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில், தமிழக முதல்வர் விஜய் கலந்துகொண்டு பல்வேறு முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்துச் உரையாற்றினார்.

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பைப் பின்பற்றி நடக்க வேண்டும். காவிரி மேலாண்மை உத்தரவுகளைக் கர்நாடக அரசு சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் தென்னிந்திய மாநிலங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. இந்தியாவில் மொத்த உள்கட்டமைப்பு உற்பத்தியில் தென் மாநிலங்கள் மட்டுமே 30 சதவீதப் பங்களிப்பை வழங்குகின்றன. எனவே, மாநிலங்களுக்கு இடையே நிதி பகிர்வதில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு பின்பற்றப்பட வேண்டும்.

கடலோரப் பகுதிகளுக்குப் புதிய திட்டங்கள் அவசியமாகின்றன. தென் மாநிலங்களுக்குச் செல்லும் நீர்வழிப் போக்குவரத்துகளை அதிகப்படுத்த வேண்டும். கடலோரப் பாதுகாப்பையும் பலப்படுத்த வேண்டும். பொது விநியோகத் திட்டத்தின் மூலம் தேவைப்படும் மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்க வேண்டும். இதற்கான கடன்களைச் சுமையாகக் கருதாமல் சட்ட விதிகளைத் தளர்த்த வேண்டும்.

பொது விநியோகத் திட்டங்களில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் போலிப் பயனாளிகள் இணைவதைத் தடுக்க வேண்டும். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதற்காகத் தண்டனை அளிப்பது போலச் செயல்படாமல், தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை இழக்கக் கூடாது. மாநிலங்களுக்கு இடையேயான நிதிப் பகிர்வைச் சீராக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.