தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் சார்பில் ஆண்டு விழா மற்றும் மாரத்தான் போட்டி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சங்கத் தலைவர் ராஜேஷ் தில்லை தலைமையில் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் விக்னேஷ் விநாயகமூர்த்தி, கலையரசி, வன்னியராஜ், சரவணகுமார், சக்திவேல், செந்தில், அலுவலகக் கண்காணிப்பாளர் சரவணன் மற்றும் பேராசிரியர் மதனகோபால் ஆகியோர் பங்கேற்றனர்.

காலை 06:00 – மாரத்தான் போட்டி: ஆண்கள் மற்றும் பெண்களுக்கு 18 வயதிற்கு மேற்பட்டோர் & உட்பட்டோர் என இரு பிரிவுகளாக நடைபெறும் இப்போட்டியை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர். சிவபிரசாத், மற்றும் அக்ரம் பெயின்ட்ஸ் மேனேஜிங் டைரக்டர் என். ஏ. பரமகுரு ராஜா ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.

பரிசுத் தொகையாக (ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக)முதல் பரிசு: ₹8,000, இரண்டாம் பரிசு ₹5,000, மூன்றாம் பரிசு ₹3,000 வழங்கப்படும்.

காலை 11:00 – பொதுக்குழுக் கூட்டம்: கல்லூரியின் முன்னாள் மாணவர்களான சென்னை 'சாய் யோகாலயா' நிறுவனர் லட்சுமி பிரியா கிருஷ்ணன்மற்றும் 'உமா ஜூவல்லர்ஸ்' இயக்குநர் ராம்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்கின்றனர்.

நிறைவாக அனைத்து பழைய மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட உள்ளது. கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் அனைவரும் திரளாகக் கலந்துகொள்ளுமாறு நிர்வாகிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.