இந்தியாவின் பொருளா​தா​ரம் அபார வளர்ச்சி அடைந்து வரு​வதால் ஒரு சிலர் மிகுந்த ஏமாற்​றம் அடைந்​துள்​ளனர். இந்​தியா தொடர்ச்​சி​யாக பூத்து குலுங்​கு​கிறது என்று பிரதமர் மோடி தெரி​வித்​துள்​ளார்.

நடப்பு நிதி​யாண்​டின் முதல் காலாண்​டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி (ஜிடிபி) 7.8 சதவீத​மாக உள்ளது என்று மத்​திய புள்​ளி​யியல் மற்​றும் திட்ட அமலாக்கத் துறை தெரி​வித்​துள்​ளது.

அமெரிக்​கா, ஈரான் இடையி​லான போரால் பல்​வேறு நாடு​களின் பொருளா​தா​ரம் பெரும் சரிவை சந்​தித்து வரு​கின்​றன. எனினும் இந்​திய பொருளா​தா​ரம் மிக​வும் வலு​வாக உள்​ளது. உலகில் அதிவேக​மாக வளரும் பொருளா​தார நாடு என்ற பெரு​மையை இந்​தியா தக்க வைத்து வரு​கிறது. இந்த சூழலில் நடப்பு நிதியாண்டின் ஏப்​ரல் முதல் ஜூன் வரையி​லான முதல் காலாண்டில் இந்​தியா​வின் பொருளா​தார வளர்ச்சி 7.8 சதவீத​மாக உள்​ளது என்று மத்திய புள்​ளி​யியல் மற்​றும் திட்ட அமலாக்​கத் துறை தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து பிரதமர் நரேந்​திர மோடி சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: 2026-27-ம் நிதி​யாண்​டின் முதல் காலாண்​டில் இந்​தி​யா​வின் பொருளா​தார வளர்ச்சி 7.8 சதவீத​மாக உள்​ளது. இது அபார வளர்ச்சி ஆகும். சர்​வ​தேச அளவில் கச்சா எண்​ணெய் விலை கணிச​மாக உயர்ந்து வரு​கிறது.

உலக விநி​யோக சங்​கி​லி​யில் பல்​வேறு பாதிப்​பு​கள் ஏற்​பட்டு உள்ளன. இந்த சவால்​களை தாண்டி இந்​திய மக்​களின் ஒருங்​கிணைந்த நடவடிக்​கைகளால் நாட்​டின் பொருளா​தா​ரம் அபார வளர்ச்சி அடைந்து வரு​கிறது. ஒரு தரப்​பினர் இந்​தி​யா​வுக்கு எதி​ரான கருத்​துகளை வெளி​யிட்டு வரு​கின்​றனர். அவர்​கள் தற்​போது மிகுந்த ஏமாற்​றம் அடைந்​துள்​ளனர். இந்​தியா தொடர்ச்​சி​யாக பூத்து குலுங்​கு​கிறது. இவ்​வாறு பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து இந்​திய பொரு ளா​தார நிபுணர்​கள் கூறிய​தாவது: வரும் 2047-ம் ஆண்​டில் வளர்ச்சி அடைந்த இந்​தி​யாவை உரு​வாக்க மத்​திய அரசு இலக்கு நிர்​ண​யித்து உள்​ளது. இந்த இலக்கை எட்ட 9.25 சதவீத பொருளா​தார வளர்ச்​சியை எட்ட வேண்​டும். ஆனால் பல்​வேறு நாடு​களில் நடை​பெறும் போர்​கள், கச்சா எண்​ணெய் விலை உயர்​வு, அமெரிக்​கா​வின் வர்த்தக போர் உள்​ளிட்ட காரணங்​களாக ஒட்​டுமொத்த உலக நாடு​களும் பெரும் பாதிப்​பு​களை சந்​தித்து வரு​கின்​றன.

இந்த சூழலிலும் இந்​தியா அதிவேக​மாக வளர்ச்சி அடைந்து வரு​கிறது. பொருளா​தார வளர்ச்சி குறைந்​தால் வேலை​வாய்ப்​பின்மை அதிகரிக்​கும். தொழிலா​ளர்​களின் ஊதி​யம் குறை​யும். நாடு முழுவதும் வர்த்​தகம் பாதிக்​கப்​படும். தற்​போது இந்​தி​யா​வின் பொருளா​தார வளர்ச்சி 7.8 சதவீத​மாக உயர்ந்​திருப்​ப​தால் புதிய வேலைவாய்ப்புகள் அதி​கரிக்​கும். இவ்​வாறு இந்​தி​ய பொருளாதார நிபுணர்​கள்​ தெரி​வித்​துள்​ளனர்​.