மகாராஷ்டிர மாநிலம் யவத்மால் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதி கடந்த 9-ம் தேதி, புதிய ‘ஹோண்டா ஆக்டிவா’ ஸ்கூட்டரை வாங்க உள்ளூரில் உள்ள ‘சாய் பாயிண்ட் ஹோண்டா’ ஷோரூமுக்கு சென்றனர். அவர்கள் தங்களது 2 வயது மகன் ருத்ரான்ஷ் சிங் தாக்கூரையும் அழைத்துச் சென்றிருந்தனர்.
புதிய ஸ்கூட்டரை வாங்கிய பிறகு அந்த தம்பதி, மகன் ருத்ரான்ஷை ஸ்கூட்டர் முன்பு நிற்க வைத்து புகைப்படம் எடுத்தனர். அப்போது அந்தச் சுட்டிப் பையன், பெரியவர்களைப் போல கண்களில் கூலிங் கிளாஸ் அணிந்து, பேண்ட் பாக்கெட்டில் கைகளை விட்டபடி செம ஸ்டைலாக போஸ் கொடுத்தான்.
இந்த அழகான தருணத்தை அவனது பெற்றோர் வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட, அது இணையத்தில் வைரலாக பரவியது. இதுவரை 13.7 கோடிக்கும் அதிகமான பார்வைகளையும், 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கமென்ட்களையும் குவித்து இந்த வீடியோ சாதனை படைத்துள்து.
சிறுவனின் அபார புகழைக் கண்டு வியந்துபோன ‘சாய் பாயிண்ட் ஹோண்டா’ ஷோரூம் உரிமையாளர் திலீப் போபடே பாட்டீல், ருத்ரான்ஷையும் அவனது குடும்பத்தினரையும் தனது ஷோரூமுக்கு மீண்டும் வரவழைத்து கவுரவித்தார். அத்துடன் எல்கேஜி முதல் கல்லூரிப் பட்டப்படிப்பு வரை ருத்ரான்ஷின் ஒட்டுமொத்த கல்விச் செலவையும் ஏற்பதாக உறுதியளித்துள்ளார்.

