'இறுதிச்சுற்று', 'ஓ மை கடவுளே', 'ஆண்டவன் கட்டளை', 'வேட்டையன்' உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் மூலம் பிரபலமான நடிகை ரித்திகா சிங், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 4.5 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்களைக் கொண்டுள்ளார். அவர் தொடர்ந்து கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.
இந்நிலையில், ரித்திகா சிங் தனது இன்ஸ்டாகிராமில் சப்ஸ்கிரிப்ஷன் (Subscription) ஆரம்பித்துவிட்டார் எனச் சில போலியான பக்கங்கள் மூலம் ரசிகர்களிடம் பணம் பறிக்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகின. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நடிகை ரித்திகா சிங், உடனடியாக எச்சரித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் தெரிவித்ததாவது: "நான் இன்ஸ்டாகிராமில் எந்தவொரு சப்ஸ்கிரிப்ஷனையும் ஆரம்பிக்கவில்லை. எனது ரசிகர்கள் ரூ.390 அல்லது ரூ.400 கொடுத்து ஏமாந்து போக வேண்டாம். ஏ.ஐ. ஆபாச வீடியோக்களைப் பார்த்து நானே ஷாக் ஆகிட்டேன், அவ்வளவு தத்ரூபமாக இருக்கு. அதனால் ரசிகர்கள் அனைவரும் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்." என்று அவர் எச்சரித்துள்ளார்.
பிரபல நடிகையின் பெயரில் நடக்கும் இந்த இணையவழி மோசடிச் சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

