தூத்துக்குடி மறக்குடி தெருவைச் சேர்ந்தவர் டிசான் (19). இவர் வேலைக்கு எதுவும் செல்லாமல் ஊதாரித்தனமாக பைக்கில் ஊர் சுற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சமூக வலைதளம் மூலமாக அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியுடன் இவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் சிறுமியுடன் ஆன்லைன் மூலம் நண்பராகப் பழகி வந்த டிசான், திடீரென அச்சிறுமிக்குப் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுக்கத் தொடங்கியுள்ளார். டிசானின் இந்தச் செயலால் அதிர்ச்சியடைந்த அச்சிறுமி, சம்பவம் குறித்துத் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்துச் சிறுமியின் பெற்றோர் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தீவிர விசாரணை நடத்திப் போக்சோ சட்டத்தின் கீழ் டிசானைக் கைது செய்தனர்.