தூத்துக்குடி மாவட்டம, காயல்பட்டினத்தைச் சேர்ந்த இலியாஸ் (40) என்பவர், நேற்று தனது மனைவி நிஷா (35) மற்றும் உறவினர் அப்துல்லா (20) ஆகியோருடன் பயணிகள் ஆட்டோவில் வைப்பாறு கிராமத்திற்குச் சென்றுள்ளார். இந்த ஆட்டோவை காயல்பட்டினத்தைச் சேர்ந்த கனிஷ்குமார் (38) என்பவர் ஓட்டியுள்ளார்.
ஆட்டோ தருவைகுளம் அந்தோணியார் கோவில் அருகே வந்து கொண்டிருந்த போது, எதிரே வந்த தனியார் பேருந்தும் ஆட்டோவும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இவிபத்தில் ஆட்டோ ஓட்டுநர் கனிஷ்குமார், இலியாஸ், நிஷா, அப்துல்லா மற்றும் பேருந்தில் பயணித்த விளாத்திகுளத்தைச் சேர்ந்த சரவணன் (48) ஆகிய 5 பேரும் காயமடைந்தனர்.
உடனடியாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தருவைகுளம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

