தென்காசி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக டாக்டர் மோனிகா ராணாவை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அவர் இன்று மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இதன் மூலம், தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் மாவட்ட ஆட்சியர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட டாக்டர் மோனிகா ராணா, சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை முடித்தவர். மருத்துவத் துறையிலிருந்து குடிமைப் பணிக்குத் தேர்வாகி, தற்போது மாவட்ட ஆட்சியர் பொறுப்பை எட்டியிருப்பது அவரது பணிப் பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது.

2018-ஆம் ஆண்டு தமிழ்நாடு கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர், தனது பயிற்சிக் காலத்தில் சேலம் மாவட்டத்தில் சார் ஆட்சியராகப் பணியாற்றியுள்ளார்.