கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 12 வயது சிறுமியைப் பாலியல் தொந்தரவு செய்த வழக்கில், கோவில்பட்டி வடக்கு புதுக்கிராமத்தைச் சேர்ந்த சங்கரன் மகன் ரவிசங்கர் (57) என்பவரைக் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவு பெற்ற நிலையில், நீதிபதி முருகன் இன்று தீர்ப்பளித்தார். குற்றம் சாட்டப்பட்ட ரவிசங்கர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ. 10,500 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஏற்பட்டுள்ள மன உளைச்சல் மற்றும் பாதிப்பைக் கருத்தில் கொண்டு, அவருக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ. 1 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டும் என்றும் மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார்.

