கடந்த 2009-ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை ஜவஹர் திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாளையங்கோட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இந்தத் வழக்கு திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 17 ஆண்டுகளாக விசாரணையில் இருந்து வருகிறது. இவ்வழக்கின் விசாரணைக்காக இன்று நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார்.
சீமானின் வருகையைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீதிமன்ற வளாகத்தைச் சுற்றிப் பலத்த காவல்துறை பாதுகாப்பு அமைக்கப்பட்டிருந்தது.

