விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா புதுப்பட்டி நமச்சிவாயபுரம் சாலையைச் சேர்ந்தவர் கணேஷ் சந்திரன் (57). இவர் திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியில் இயங்கி வரும் ஒரு பெட்ரோல் பங்க்கில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

இதே பெட்ரோல் பங்க்கில் பணியாற்றி வரும் இளம் பெண் ஒருவருக்கு, மேலாளர் கணேஷ் சந்திரன் தொடர்ந்து பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. மேலாளரின் அத்துமீறல் குறித்துப் பாதிக்கப்பட்ட அந்த இளம் பெண் கங்கைகொண்டான் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, பாலியல் தொல்லையில் ஈடுபட்ட பெட்ரோல் பங்க் மேலாளர் கணேஷ் சந்திரனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.