தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல பிரதம பேராயரின் ஆணையாளர் கிறிஸ்டோபர் விஜயன் பேராயர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திருமண்டல உபதலைவர் மோசஸ் ஜெபராஜ், குருத்துவ செயலர் தாமஸ், லே செயலர் எஸ்டிகே ராஜன், திருமண்டல பொருளாளர் ஜாண்சன் டேவிட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்வாக, 2027-ஆம் ஆண்டுக்கான தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தின் சட்ட வாக்கியம் வெளியிடப்பட்டது. அதன்படி, "தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்; உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்" (ஏசாயா 44 : 3) என்ற இறைவசனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

திருமண்டல ஸ்தோத்திரப் பண்டிகையை முன்னிட்டுப் பல சமூக நலப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அதன்படி தாய்-தந்தையை இழந்த மாணவர்களின் கல்வி நலனைக் காக்கும் வகையில் கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டன. திருச்சபைகளைச் சேர்ந்த ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தையல் இயந்திரங்கள், கிரைண்டர்கள், ஆடுகள் மற்றும் மருத்துவ உதவித்தொகைகள் வழங்கப்பட்டன.

இவ்விழாவில் திருமண்டலத்தின் அனைத்து குருமார்கள், சபை ஊழியர்கள், திருமண்டல நிறுவனங்களின் பொறுப்பாளர்கள், நிர்வாகக் குழு உறுப்பினர்கள், கல்வி நிறுவனங்களின் தாளாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் திரளான சபை மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.