கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் பகுதியில், ஆனந்தன் பாலம் அருகே உள்ள நான்கு சாலைகள் சந்திப்பில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக பள்ளிகள் முடியும் நேரங்களில் ஏராளமான வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நிற்பதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இதனால் அவசர சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, காலை மற்றும் மாலை நேரங்களில் இப்பகுதியில் போக்குவரத்து காவலர்களை பணியில் அமர்த்தி, போக்குவரத்தை ஒழுங்குபடுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

