உத்தரப் பிரதேசம், பிகார், மகாராஷ்டிரம் மற்றும் கர்நாடக ஆகிய மாநிலங்களில் சட்ட மேலவை இடங்களுக்கான வாக்குப்பதிவு கடந்த அக். 23 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (அக். 29) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

28 சட்ட மேலவை இடங்களுக்கான தேர்தலில், காங்கிரஸ் ஒரு இடத்தில்கூட வெற்றியைப் பதிவு செய்யவில்லை. இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது: ”உத்தரப் பிரதேசம், பிகார், மகாராஷ்டிரம் மற்றும் கர்நாடகம் ஆகிய 4 பெரிய மாநிலங்களில் 28 இடங்களுக்கு, எம்எல்சி தேர்தல் வாக்குச்சீட்டு முறையில் நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சி எத்தனை இடங்களை வென்றது என்று நினைக்கிறீர்கள்?” என்று கிண்டலாக தெரிவித்துள்ளார். வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.