இப்படத்தை அறிமுக இயக்குநர் சித்தார்த் இயக்குகிறார். இன்ஸ்டாகிராம் மூலம் புகழ்பெற்ற அமலா ஷாஜி இப்படத்தின் மூலம் கதாநாயகியாகத் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். மேலும், நடிகை ஷிவாத்மிகா ராஜசேகரும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ, கோவை நகரைப் பின்னணியாகக் கொண்ட தங்கம் கடத்தல் மற்றும் குற்றச் சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.
வீடியோவில் இடம்பெற்றுள்ள "நமது கையில் இருக்கும் ஒரு கிராம் தங்கம், ஒருத்தன் உயிரையாவது எடுத்துவிட்டுதான் கைக்கு வந்திருக்கும்" என்ற விக்ரம் பிரபுவின் கம்பீரமான வசனம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தை 'யு1 ரெக்கார்ட்ஸ்' மற்றும் 'ரோமியோ பிக்சர்ஸ்' இணைந்து தயாரிக்கின்றன. படத்திற்கு கார்த்திக் ஷராஜ் ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் விறுவிறுப்பாகத் தொடங்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் வெளியீட்டுத் தேதி உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

