ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாளை முன்னிட்டு தமிழக மக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் (X) தளத்தில் மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இன்று சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையும், நாளை விஜயதசமியும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பலர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வரும் நிலையில், முதலமைச்சர் விஜய் பொதுமக்களுக்கு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: "நம் வாழ்வின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்கும் கருவிகள், வாகனங்கள் மற்றும் நாம் செய்யும் தொழில் என அனைத்தையும் இறைவனாகப் போற்றி, உழைப்பின் உயர்வையும், தொழிலின் மேன்மையையும் போற்றும் ஆயுத பூஜை நன்னாளையும், கல்வி, கலை, தொழில் என புதிதாகத் தொடங்கும் அனைத்து முயற்சிகளையும் சிறக்கச் செய்யும் வெற்றித் திருநாளாம் விஜயதசமி நன்னாளையும் கொண்டாடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்திருநாட்கள், அனைவரின் வாழ்விலும் புதிய நம்பிக்கையையும், வளத்தையும் கொண்டு சேர்க்கட்டும்! நன்மைதரும் புதிய முயற்சிகளை முன்னெடுத்து, கல்வியிலும், தொழில் வளர்ச்சியிலும் மேன்மையுற்று, வெற்றித் தமிழகத்தைப் படைத்திடுவோம்! ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கட்டும்! அனைவரது வாழ்விலும் நலமும், வளமும் பெருகட்டும்!" என்று அவர் பதிவிட்டுள்ளார்.