மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வந்து செயலாற்றும் வகையில் அரசு அறிவித்துள்ள “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின்படி மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் கயத்தார் வட்டத்தில் 21.10.2026 அன்று கயத்தார் வட்டத்திலுள்ள அனைத்து துறை அலுவலகங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அன்றையதினம் கயத்தார் வட்டாட்சியர் அலுவலகத்தில்; மதியம் 02.00 முதல் 2.30 வரை பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார்.

அதன்பின் மாலை 02.30 மணி முதல் அனைத்து துறை அலுவலர்கள் முற்பகலில் மேற்கொள்ளப்பட்ட கள பயணங்கள் / அலுவலக ஆய்வுகள் குறித்தும், மீண்டும் நகர்ப்புறம் / கிராம ஊராட்சிகள் பகுதிகளுக்குச் சென்று பல்வேறு அரசு துறைகளின் சேவை வழங்குதல் / திட்ட செயல்பாடுகள் குறித்து மதிப்பாய்வு செய்வது குறித்தும், மேலும் மறுநாளான 22.10.2026 அன்று அதிகாலை அடிப்படை வசதிகளான குடிநீர் / சுகாதாரம் / தூய்மை / போக்குவரத்து / பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் போன்றவற்றை ஆய்வு மேற்கொள்ளப்படும்.

எனவே, மக்கள் இருப்பிடம் தேடி சேவை அளிக்கும் வகையிலும் களஆய்வின் போது கண்டறியப்பட்ட அவ்வட்ட மக்களின் தேவைகள் குறித்த முன்மொழிவுகளை அரசுக்கு அனுப்பி வைத்திடும் வகையிலும் உருவாக்கம் செய்யப்பட்டுள்ள “ உங்களைத் தேடி, உங்கள் ஊரில்“ திட்ட முகாமின் போது பொதுமக்கள், தங்கள் வாழ்விட முன்னேற்றத்திற்கு தேவையான கருத்துக்களையும், கோரிக்கை மனுக்களையும் வழங்கிடலாம் என மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன் தெரிவித்துள்ளார்.