உக்ரைன் போர் குறித்து விவாதிப்பதற்காக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோருடன் முத்தரப்பு பேச்சு நடத்துவதற்கான முன்மொழிவு ஒன்றை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வெளியிட்டுள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போர் நான்கு ஆண்டுகளைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது.

போர் முடிவுக்கு வர பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், இரு தரப்பிலும் தொடர்ந்து பரஸ்பர தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து விவாதிக்க, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜின்பிங்குடன் முத்தரப்பு பேச்சுக்குத் தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய தொலைபேசி வழி உரையாடலின் போது புதின் இதை டிரப்பிடப் முன்வைத்ததாகக் கூறப்படுகிறது. வரும் நவம்பர் 18 மற்றும் 19 தேதிகளில் சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற உள்ள ஆசிய - பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டின்போது, இச்சந்திப்பை நடத்தலாம் எனப் புதின் தெரிவித்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், இந்தப் பேச்சுக்கு உக்ரைனை அழைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.