தூத்துக்குடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் இயங்கி வரும் சேவா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை மற்றும் 'காந்திய வழியில் ஊருக்கு பத்து பேர் இயக்கம்' சார்பில் காந்தி ஜெயந்தி விழா நடைபெற்றது.

இவ்விழாவில் அமைப்பின் நிறுவனரும், மகளிர் நல மன்றச் செயலாளருமான காமாட்சி முருகன் வரவேற்புரையாற்றினார். பணிக்கநாடார் குடியிருப்பு ஸ்ரீ கணேசர் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் முருகன், கல்வி வல்லல் ஏ.பி.சி.வி.சண்முகத்திற்கு பொன்னாடை போர்த்தி காந்திய விருது வழங்கிச் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட வாசிப்பு நற்பணி மன்றத் தலைவர் கவிஞர் மாரிமுத்து, பத்திரிகையாளர் ரவி, தொழிற்சங்கம் மேலாளர் ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவுக்கான ஏற்பாடுகளைச் சேவா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை, காந்திய வழியில் ஊருக்கு பத்து பேர் இயக்கம் மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நல மன்றம் ஆகியவை இணைந்து சிறப்பாக செய்திருந்தன.