தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் ஆழியார் தெருவைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது மகன் ஷேக் அப்துல்காதர் (26), இவர் நேற்று மாலை 5.30 மணியளவில் தனது மோட்டார் பைக்கில் தூத்துக்குடியில் இருந்து காயல்பட்டினம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவருக்குப் பின்னால் வந்த சரக்கு லாரி எதிர்பாராத விதமாக அவரது பைக் மீது மோதியது. இந்த விபத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்த ஷேக் அப்துல்காதரின் தலையின் பின் பகுதியில் பலத்த ரத்தக் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து குறித்து முத்தையாபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய முக்காணி யாதவர் தெரு நடுத்தெருவைச் சேர்ந்த கோட்டைமுத்து மகன் பாலசுப்ரமணியன் (51) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.