தூத்துக்குடி செல்வவிநாயகபுரம் பகுதியில் இடிந்து விழும் நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மரை சீரமைக்க வேண்டும் என்று இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட செல்வவிநாயகபுரம் பகுதியில் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் தினமும் செல்லும் சாலையோரத்தில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மர் ஒன்று எந்த நேரமும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

பெரும் பொருள் மற்றும் உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்பாக மாவட்ட நிர்வாகமும் மின்வாரியமும் உடனடியாகத் தலையிட்டு இதனைச் சீரமைக்க வேண்டும் என இந்து முன்னணி சார்பில் கே.எஸ். ராகவேந்திரா கோரிக்கை விடுத்துள்ளார்.