தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி வளாகத்தில் கல்விக் கடன் முகாம் இன்று நடைபெற்றது. இம்முகாமைக் கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி எம்.பி., தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மாணவர்கள் தங்கள் உயர்கல்வித் தேவைகளுக்கான கடன் வாய்ப்புகளைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளவும், தேவையுள்ள அனைத்து மாணவர்களும் இம்முகாம் மூலம் பயனடையவும் இது உதவிகரமாக அமையும் எனக் குறிப்பிட்டார். மேலும், மாணவர்கள் அனைவரும் இதில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டார்.

விழாவில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் குரு சந்திரன், ஸ்டேட் வங்கி மண்டல மேலாளர் மகேஷ், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல மேலாளர் ஜெயந்த், தூத்துக்குடி மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் விநாயகமூர்த்தி, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பொது மேலாளர் ஆனந்த் கணேசன் மற்றும் அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடன் பங்கேற்றனர்.