தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி ஏற்பாட்டில், மாணவர்களின் உயர்கல்வி கனவுகளை நனவாக்கும் வகையிலான வழிகாட்டுதல் நிகழ்ச்சி மற்றும் கல்விக் கடன் முகாம் வருகிற 23-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு நடைபெறுகிறது.

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், உயர்கல்வி வாய்ப்புகள், வேலைவாய்ப்பு வழிகாட்டுதல்கள் மற்றும் பல்வேறு துறைசார் வழிகாட்டுதல்கள் வழங்கப்படவுள்ளன. எனவே மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி. கீதாஜீவன் கேட்டுக்கொண்டுள்ளார்.