தூத்துக்குடி திருமந்திரநகரில் அமைந்துள்ள அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவிலில் 1202-ம் ஆண்டு ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா வரும் அக்டோபர் 26-ம் தேதி திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

வருகிற 26ஆம் தேதி (திங்கள்) காலை 9:00 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. இரவு 7:00 மணிக்கு பித்தளை சப்பரத்தில் அம்பாள் திருவீதியுலா நடைபெறுகிறது. அக். 27 முதல் நவ. 2 வரை தினமும் காலை அபிஷேக, தீபாராதனைகளும், இரவு 7:00 மணிக்கு பல்வேறு வாகனங்களில் அம்பாள் திருவீதியுலா நடைபெறுகிறது.

நவ. 3ஆம் தேதி (செவ்வாய்) 9-ம் திருநாளில் தேரோட்டம் நடைபெறுகிறது. இரவு 7:00 மணிக்கு கேடயத்தில் அம்பாள் திருவீதியுலா நடைபெறுகிறது. நவ. 4 (புதன்) 10-ம் திருநாள் விழாவில் காலை 10:00 மணிக்குச் ஸ்ரீ பாகம்பிரியாள் அம்பாளுக்குக் குடமுழுக்கு, தீர்த்தவாரி நடைபெறுகிறது. இரவு 7:00 மணிக்கு பூப்பல்லக்கில் அம்பாள் திருவீதியுலா காட்சி தருகிறார்.

நவ. 5 (வியாழன்) - 11-ம் திருநாளில் இரவு 8:00 மணிக்குச் சிகர நிகழ்வான ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நடைபெறுகிறது. நவ. 6 (வெள்ளி) காலை குடமுழுக்கு, இரவு ஊஞ்சல் தீபாராதனை மற்றும் சண்டிகேஸ்வரர், பைரவர் பூஜைகளுடன் திருவிழா நிறைவடைகிறது. திருவிழா ஏற்பாடுகளை திருவிழாவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.