தூத்துக்குடி நந்தகோபாலபுரம் செல்வநாயகபுரம் பத்திரகாளி அம்மன் திருக்கோயில் தசரா திருவிழாவின் 7-ம் நாள் மண்டல பூஜை முன்னாள் எம்.எல்.ஏ. பெரியசாமி குடும்பத்தின் சார்பில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையொட்டி நடைபெற்ற சிறப்புப் பூஜையில், பெரியசாமியின் மகன்களும், தர்மகர்த்தாக்களுமான என்.பி. ராஜா பெரியசாமி, மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் அசோக் வர்தனா ஆகியோருக்குப் பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர்கள் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அங்குத் திரண்டிருந்த பக்தர்களுக்குப் பொங்கல், புளியோதரை மற்றும் சுண்டல் பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர் கனகராஜ், வட்ட செயலாளர்கள் ரவீந்திரன், முனியசாமி, ராஜாமணி, மாவட்ட பிரதிநிதி நாராயணன், முன்னாள் கவுன்சிலர்கள் மாரியப்பன், பெரியசாமி, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், நிர்வாகிகள் அருணகிரி, அற்புதராஜ், ராஜா, ஆவுடையப்பன், பெரியசாமி, வேல்பாண்டி, பாலசுப்பிரமணியன், கணேசன், இளைஞர் அணி கோவசந்த், பாலமுருகன், ராஜ்குமார், அருண், தங்கராஜ், ஆனந்த் மற்றும் போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், ஜேஸ்பர் லிங்கராஜா, கோயில் நிர்வாகிகள் அய்யாதுரை, சொல்வழங்கு ராஜா, மகளிர் அணி மஞ்சுளா, முனியசாமி, தெய்வா, தங்க பாப்பா, தொமுச பேச்சிமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.

