தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. நேற்று இரவு இடி மின்னலுடன் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று (அக்.22) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை 6 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 933.70 மிமீ மழை பெய்துள்ள்ளது. அதிகபட்சமாக திருச்செந்தூரில் 117.6மிமீ, காயல்பட்டினத்தில் 115 மிமீ மழை பதிவாகி உள்ளது.
மேலும், தூத்துக்குடியில் 16.6, ஸ்ரீவைகுண்டத்தில் 29, குலசேகரன்பட்டினத்தில் 62, சாத்தான்குளத்தில் 74.60, கோவில்பட்டியில் 70, கழுகுமலையில் 56, கயத்தார் 43, கடம்பூர் 51.90, எட்டயபுரம் 42, விளாத்திகுளம் 74, காடல்குடி 17, வைப்பார் 45, சூரங்குடி 46, ஓட்டப்பிடாரம் 38, மணியாச்சி 20, வேடநத்தம் 5, கீழ அரசரடி 11 என மாவட்டம் முழுவதும் சராசரியாக 49.14 மிமீ மழை பதிவாகி உள்ளது.

