தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் இன்று காலை 6.30 மணி நிலவரப்படி மொத்தம் 152.10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. வைப்பாரில் அதிகபட்சமாக 27 மி.மீ. மழையும், சாத்தான்குளத்தில் 24 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தின் பல பகுதிகளில் மிதமான மழையும், சில இடங்களில் லேசான மழையும் பெய்துள்ளது.

மழை அளவு விவரம் (மி.மீட்டரில்):

வைப்பார்: 27.00 மி.மீ.

சாத்தான்குளம்: 24.00 மி.மீ.

காயல்பட்டினம்: 21.00 மி.மீ.

திருச்செந்தூர்: 11.60 மி.மீ.

ஸ்ரீவைகுண்டம்: 10.00 மி.மீ.

கழுகுமலை: 10.00 மி.மீ.

சுரங்குடி: 10.00 மி.மீ.

கீழஅரசடி: 10.00 மி.மீ.

தூத்துக்குடி: 7.50 மி.மீ.

குலசேகரன்பட்டினம் 5.00 மி.மீ.

கடல்குடி: தலா 5.00 மி.மீ.

கயத்தாறு: 3.00 மி.மீ.

விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம், மணியாச்சி, வேடநத்தம் பகுதிகளில் தலா 2.00 மி.மீ மழை பெய்துள்ளது. கோவில்பட்டி, கடம்பூர், எட்டையபுரம் பகுதிகளில் மழை இல்லை. மாவட்டம் முழுவதும் மொத்தம் 152.10 மி.மீ. மழை பதிவாகியுள்ளதுடன், மாவட்டத்தின் சராசரி மழை அளவு 8.01 மி.மீ. ஆகப் பதிவாகியுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் மிகக் கனமழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், மாவட்டத்தில் இடி மின்னல் தாக்கி ஒருவர் (ஆண்) உயிரிழந்துள்ளார் என்று மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.