தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தனி விரல் ரேகைப் பிரிவில், திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் இரா. திருநாவுக்கரசு இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தனி விரல் ரேகைப் பிரிவில் (SDFPB Unit) இன்று (22.10.2026), திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் இரா. திருநாவுக்கரசு ஆய்வு மேற்கொண்டு, பணிகள் மற்றும் பதிவேடுகளைப் பார்வையிட்டு, காவல் அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினார். ஆய்வின்போது, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத், மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

