தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் மது குடிப்பதில் ஏற்பட்ட தகராறில் நேற்று மீனவர் கொலை செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து வட பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்ராஜ் சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் கடற்கரையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது ஒருவர் பைக்கில் சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்தார். உடனே அவரை பிடித்து விசாரணை செய்து அவர் பைக்கில் முன்பு பையில் வைத்திருந்த 38 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை செய்ததில் அவர் தூத்துக்குடி தாளமுத்து நகரை சேர்ந்த சுப்ரமணியன் மகன் ஜெயக்குமார் (45) என்பது தெரிய வந்தது.

மீனவரான இவர் மதுபான கடையில் மொத்தமாக பாட்டில்களை வாங்கி வந்து காலையில் மீன்பிடிக்க சொல்லும் மீனவர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. பின்னர் அவரை கைது செய்து பைக்கையும் பறிமுதல் செய்தனர்.