தூத்துக்குடி அருகே உள்ள வடக்கு முத்தையாபுரம் பகுதியில், பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், அருணாச்சலாபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த காளிமுத்து மகன் வல்லரசு (30) என்பவர், நேற்று மாலை புதூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பந்தல்குடி to விளாத்திகுளம் ரோட்டில் நேற்று மாலை 5.00 மணி அளவில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று எதிர்பாராத விதமாக அவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த வல்லரசு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து புதூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

