தூத்துக்குடி முள்ளக்காடு பாலாஜி நகரைச் சேர்ந்தவர் அந்தோணி பிச்சை மகன் சுதாகர் (33). இவர் தனியாக வசித்து வந்துள்ளார். 33 வயதாகியும் தனக்கு திருமணமாகாமல் இருந்ததால் அவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், கடந்த இரண்டு நாட்களாக அதிக மதுபோதையில் இருந்ததாகவும் தெரியவருகிறது.

இந்நிலையில் நேற்று அவர் தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார. இதுகுறித்து தகவல் அறிந்து தெர்மல் நகர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.