ஏரல், திருச்செந்தூர், தூத்துக்குடி, சென்னை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் ஜவுளி மற்றும் தங்க நகை வணிகத்தில் முன்னணி நிறுவனமாக விளங்கி வரும் கே.சின்னத்துரை அண்ட் கோ நிறுவனத்தின் 6-வது புதிய கிளை திண்டுக்கல் - பழநி பைபாஸ் ரோடு அருகே நேற்று பிரம்மாண்டமாகத் திறக்கப்பட்டது.
விழாவிற்கு வருகை தந்த வாடிக்கையாளர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களை நிறுவனத்தின் உரிமையாளர்கள் திருநாவுக்கரசு, அரிராமகிருஷ்ணன், நமச்சிவாயம் ஆகியோர் வரவேற்றனர். முதல் விற்பனையைக் கடையின் உரிமையாளர்கள் செல்வராஜ் நாடார், திருமணி நாடார் ஆகியோர் தொடக்கி வைக்க, ஏரல் ராமகிருஷ்ண நாடார் பாத்திரக்கடை உரிமையாளர் ராஜ் குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பழனிச்சாமி, வீராச்சாமி நாதன், திண்டுக்கல் மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, தூத்துக்குடி தொழிலதிபர் சுரேஷ்குமார், திண்டுக்கல் தொழிலதிபர் வெங்கடேசன், ஏரல் சேர்மன் அருணாசலசுவாமி கோயில் பரம்பரை தக்கார் கருத்தபாண்டிய நாடார் உட்பட திரளான தொழிலதிபர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
கடையின் சிறப்பம்சங்கள்:
வாடிக்கையாளர்களின் வசதிக்காகப் புதிய ஷோரூம் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் சேலை மற்றும் தங்க நகை பிரிவு, முதல் தளத்தில் பேன்சி மற்றும் பட்டுச்சேலைகள், இரண்டாவது தளத்தில் பெண்களுக்கான ஆடைகள், மூன்றாவது தளத்தில் சிறுவர், சிறுமியருக்கான ஆடைகள் என பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்களுக்கென தனி ஷோரூமும் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
விசாலமான கார் பார்க்கிங் வசதியுடன், போக்குவரத்து நெரிசல் இன்றி பொதுமக்கள் தீபாவளி ஆடைகளை வாங்கிச் செல்ல அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
திறப்பு விழா சிறப்பு சலுகை
திறப்பு விழாவை முன்னிட்டு அனைத்து ஜவுளி ரகங்களுக்கும் 10 சதவீத தள்ளுபடியும், தங்கம் பவுனுக்கு ரூ.2,500 தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. மேலும் ரூ.1,000-க்கு மேல் ஜவுளி வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும் என நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

