தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் கே.ஆர். காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகள் பவித்ரா (27), கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி இரவு சூடம் பற்றவைத்தபோது எதிர்பாராதவிதமாக நைட்டியில் தீப்பற்றியது. இதில் அவருக்கு உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்குத் தீவிர தீக்காயப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த பவித்ரா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.