தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தூத்துக்குடி மாவட்டம் சார்பாக மது புகை போதைகளுக்கு எதிரான மாபெரும் விழிப்புணர்வு மாரத்தான் தூத்துக்குடி வி.வி.டி. சிக்னலில் இருந்து துவங்கி தந்தி ஆபீஸ் வரை நடைபெற்றது. இந்த மாரத்தான் நிகழ்ச்சியை தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தௌலத்துல்லா கொடியசைத்து துவங்கி வைத்தார்.

நிகழ்ச்சி நிறைவில் மாவட்ட தலைவர் அசாருதீன் மது போதைகளிலிருந்து நாமும் நம் சமூகமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போதைகளுக்கு எதிராக உறுதி மொழியும் எடுத்து பங்கெடுத்தனர். பங்கெடுத்த அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் ரசீது, பொருளாளர் அலாவுதீன், துணைச் செயலாளர் சாகுல் மற்றும் கலிமுத்தீன், தொண்டரணி பரீத், மருத்துவர் அணி,நவாஸ் மாணவரணி சதாம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.